The Dark Side of Positivity!!!

 

Let’s stay positive!!!

மனச்சோர்வூட்டும் செய்திகள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலகட்டத்தில், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நேர்மறையான சிந்தனையை வலியுறுத்தும் வகையில் நம் அன்றாட வாழ்வில் அதிகமாக கேட்கும் மந்திரம் இது.

 Positive thinking ஒருவரின் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் அதே வேளையில், அது ஒருவரின் உணர்ச்சி நிலை எதுவாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கட்டளையை மூளை செயல்படுத்தும், அது "toxic positivity"-யாக மாறலாம்.

Toxic positivity என்பது எதிர்மறை (Negative thinking) உணர்ச்சிகளை அடக்கும் நிகழ்வைக் குறிக்கிறது, மகிழ்ச்சியாக இருப்பது போல் பாவனை செய்து, எப்போதும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என்று உறுதி அளிப்பது போல உள்ளது. ஆனால் நீண்ட காலத்திற்கு இந்த உண்மை, நமது எதிர்மறை உணர்ச்சிகளை அடக்கி, நமது உளவியல் அதிருப்தியை எதிர்கொள்ளாமல் இருப்பது போன்றதாகும். அது கவலை, பயம், தனிமை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை தோற்றுவிக்கும். மேலும், இது நுண்ணறிவு (intelligence), படைப்பாற்றல் (creativity), ஆற்றல் (Energy) மற்றும் வேலை செயல்திறன் (work performance) ஆகியவற்றை பாதிக்கும். உண்மையில், எதிர்மறை உணர்ச்சிகளைத் தவிர்க்க முயற்சிப்பது விரும்பிய விளைவைக் கொண்டுவராது.

வலியானது நமது கடந்தகால நடத்தையை மறுபரிசீலனை செய்ய வைக்கும், என்ன தவறு நடந்தது என்பதை யோசிக்க  செய்து, எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க பயன்படும். செயல்முறையின் மூலம், நம் தவறுகளை அடையாளம் கண்டு, நமது உணர்ச்சி நுண்ணறிவை மேம்படுத்தும். சந்தேகத்திற்கு இடமின்றி அனுபவிப்பது சங்கடமாக இருந்தாலும், வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களை மேலும் இனிமையாக உணர வைக்கும். இதுதான்  வாழ்வின் "Reality".

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிகப்படியான positive thinking நம் வாழ்வின் அடுத்த கட்டத்தை அடைய முடியாமல் செய்து விடும்.

"பலவிதமான உணர்ச்சிகளை அனுபவிப்பது இயல்பானது

அதுதான் உங்களை மனிதனாக்குகிறது."


Comments